னது தங்கை மன்னாரா சக நடிகை ஸ்ரத்தா தாஸை குச்சியால் அடிக்கவில்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் தங்கை மன்னாராவும் நடிகையாகியுள்ளார்.
அவர் படுகவர்ச்சி காட்டி நடித்துள்ள ஜித் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய படத்தில் மன்னாராவுடன் ஸ்ரத்தா தாஸும் நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் மன்னாரா குச்சியை வைத்து ஸ்ரத்தாவை தாக்கும் காட்சி உள்ளது.
இந்த காட்சியை படமாக்கியபோது மன்னாரா தன்னை நிஜமாகவே அடித்துவிட்டதாக ஸ்ரத்தா குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் ஜித் படம் தொடர்பான நிகழ்ச்சியில் மன்னாராவுடன், பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார்.
அப்போது ஸ்ரத்தா குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் மன்னாரா மற்றும் பிரியங்காவிடம் கேட்டனர்.ஸ்ரத்தா ஒரு நல்ல நடிகை. படத்தில் அவருக்கு முக்கியமான வேடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரை யாரும் நிஜத்தில் அடிக்கவில்லை.
படக்குழுவினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றார். பிரியங்கா கூறுகையில், ஸ்ரத்தாவை யாரும் நிஜத்தில் அடிக்கவில்லை. அடிக்கும் காட்சியை தான் படமாக்கினர். சிலநேரம் விபத்துகள் நடக்கத் தான் செய்யும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template