கோச்சடையான் படம் புடிக்கல… : பட விழாவில் நிரூபித்த ரஜினி
எடுக்க ஆரம்பித்த நாளிலிருந்தே ‘கோச்சடையான்’ மீது ரஜினிக்கு நம்பிக்கையே இல்லாமல் தான் இருந்தது.
அவரது கணிப்பைப் போலவே அந்தப்படம் மனக் கஷ்டத்தோடு, கொஞ்சம் பண நஷ்டத்தையும் கொடுத்தது.
அதன் ஆடியோ பங்ஷனிலேயே இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக சொன்ன ரஜினி சமீபத்தில் நடந்த ‘லிங்கா’ ஆடியோ பங்ஷனில் கூட ‘கோச்சடையான்’ படத்தில் நஷ்டம் ஏற்பட்டது என்கிற உண்மையை ஒப்புக்கொண்டார்.
”படத்தோட ஆரம்ப சீன், அட்லிஸ்ட் கிளைமாக்ஸ்லேயாவது நீங்க வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தோம், நீங்க வராதது எங்களுக்கு ஏமாத்தமா இருந்துச்சு” என்று பலரும் தன்னிடம் ஆதங்கப்பட்டதாக ரஜினி சொன்னார்.
ஆக மகள் படம் என்கிற சுயநலம் பார்க்காமல் ‘கோச்சடையான்’ ஒரு தோல்விப்படம் தான் என்பதை ஒப்புக்கொண்ட ரஜினி அது எப்போதுமே தனக்கு பிடித்தமான படமாக இல்லை என்பதை கோவா பட விழாவிலும் நிரூபித்தார்.
2014- ஆம் ஆண்டின் திரையுலகில் சிறந்த மனிதருக்கான விருதை வாங்க கோவாவுக்கு சென்றார் ரஜினி. அங்கு நடைபெற்ற பட விழாவில் செளந்தர்யாவின் ‘கோச்சடையான்’ படமும் திரையிடப்பட்டது.
ஆனால், படம் திரையிடத் தயாரான போது தனக்கு வேறு வேலையிருப்பதாக கூறி சென்று விட்டார் ரஜினி. கடைசியில் இப்படத்தை சௌந்தர்யாவும், அம்மா லதா ரஜினிகாந்த்தும் மட்டுமே பார்த்தனர். அப்பாவின் இந்த செயலால் மனவருத்தத்தில் இருக்கிறார் செளந்தர்யா என்கிறது கோடம்பாக்கம்.
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்பது தானே ரஜினி சொன்ன யதார்த்தம்?
0 comments:
Post a Comment