shruthi_hasan_10தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன், கோலிவுட் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்க்காக தெலுங்கு படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு 20% முடிந்துவிட்ட நிலையில் விஜய் நடித்து வரும் விஜய் 58 படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால் மகேஷ்பாபு படத்தில் இருந்து விலகுவதாகவும், அந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை முழுவதையும் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் ஸ்ருதிஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனால் மகேஷ்பாபு உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் மற்றும் சிம்புதேவன் கொடுத்த பிரஷர் காரணமாகவே ஸ்ருதிஹாசன் மகேஷ்பாபு படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் மீது மகேஷ்பாபு கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒருசில ஊடகங்களில் சமீபத்தில் தெலுங்கு படவுலகம் விஜய் மீது தடை விதித்ததால் அதிருப்தி கொண்ட ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், விஜய் மீதான தடை விலகும்வரை இனி தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியதாகவும் செய்தி வெளியிட்டிருந்தன

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template