கடந்த வருடம் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆரம்பம்’. இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
இப்படம் ரிலீசாகி அதிக வசூல் குவித்தது. இந்த படம் ஹாலிவுட் படத்தின் காப்பி. ஆனாலும் அஜித் நடந்து போவது, பைக் ஓட்டுவது, காரில் முன்னாள் நின்று கொண்டு பைட் செய்வது என பல சாகசங்கள் புரிந்திருப்பார். அந்த சண்டைகாட்சியின் போது தான் அஜித்திற்கு காலில் பலமாக அடிபட்டது.
இப்படி அஜித்தின் சாகசங்களில் வெற்றிகரமாக ஓடிய படத்தை இந்திப் பட தயாரிப்பாளர்கள் பலர் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழில் ஆரம்பம் என்று வெளிவந்த இப்படம் இந்தியில் பிளேயர் கில்லாடி என்னும் பெயரில் வெளியாகிறது.
இப்படத்தின் டப்பிங் உரிமையை சினி கார்ன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தை வெளியிடவுள்ளனர்.
0 comments:
Post a Comment