மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சிலம்பரசன். இவர் கடைசியாக கதாநாயகனாக நடித்த ‘போடா போடி’ 2012-ல் வெளியானது. அதன்பின் சுமார் இரண்டு வருடங்கள் அவருடைய படங்கள் வெளியாகவில்லை.
தற்போது, சிம்பு நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. முதல் படம் ‘வாலு’. இந்தப் படத்தின் டப்பிங் வேலை சமீபத்தில்தான் முடிந்தது. இந்தப் படம் அடுத்த மாதம் 24-ந்தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
அடுத்த படம் அவர் தம்பி இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் நடித்துள்ளனர். 8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சிம்பு. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதனால், சிம்பு ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது படங்களை தொடர்ச்சியாக காண இருக்கிறார்கள்

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template