அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்து வருகிறார். அஜீத் இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை விரைவில் வெளியிடவுள்ளனர்.
இப்படத்தையடுத்து அஜீத், வீரம் படத்தை இயக்கிய சிவாவுடன் இணையவுள்ளார். இவர் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த வீரம் படம் சூப்பர் ஹிட்டாகி வசூலிலும் சாதனைப்படைத்தது. இப்படத்தில் அஜீத்துடன் இணைந்து சந்தானம் நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் காமெடி ஒர்க்கவுட் ஆகவே, அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தில் சந்தானம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template