தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அனுஷ்கா, தான் நடித்து வரும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் ஆண் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் தற்போதைய இளையதலைமுறை நடிகர்கள் வரை அனைவருமே பெண் வேடத்தில் நடித்துள்ளனர். ஆனால் மிகச்சில நடிகைகள் மட்டுமே ஆண் வேடத்தில் தோன்றியுள்ளனர்.

இந்நிலையில் பெரும் பொருட்செலவில் தெலுங்கு மொழியில் தயாராகி வரும்
ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா ஆண் வேடத்தில் நடித்து வருகிறார்.  போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் அனுஷ்கா ராணியாக நடித்து வருகிறார்.

மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதற்காக ராணி அனுஷ்கா ஆண் போல மாறுவேடம் கொண்டு நள்ளிரவு நேரத்தில் நகர வீதியில் வலம் வருவது போன்றும் அப்போது அவரை கடத்த எதிரிகள் முயற்சி செய்வது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் ஆண்வேடம் பொருத்தமாக வரவேண்டும் என்பதற்காக பலமணி நேரம் அனுஷ்கா மேக்கப்பிற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அனுஷ்கா டூப் போடாமல் வாள் சண்டை போட்டுள்ளாராம். இந்த படத்தில் ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா, அல்லு அர்ஜூன் போன்றோரும் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை குணசேகர் டைரக்டு செய்கிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template