டிகர் சங்க விவகாரங்களில் விஷால் எல்லை மீறிப்போனால்
அவரை சங்கத்தை விட்டே நீக்குவோம் என்று நேற்று எச்சரிக்கை
செய்திருந்தார் சரத்குமார்.
அவரின் இந்த எச்சரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஷால் சரத்குமார் மீது கடுமையாக பாய்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
“நடிகர் சங்கத்தின் தலைவரான சரத்குமாரின் தெளிவற்ற, போலித்தனமான பேச்சுக்களைக்
கேட்டு நான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளேன்.
நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்கள் மீதும் நான் மிகுந்த மரியாதை
வைத்திருக்கிறேன்.
நான் தவறு செய்திருப்பதாக அவர்கள் நினைத்து நடிகர் சங்கத்திலிருந்து நான் நீக்கப்பட்டால்
அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் அதற்கு முன்பாக சங்கத்திற்கு
விரோதமாக நான் என்ன பேசினேன் என்பதை சரத்குமார் சொல்ல வேண்டும்.
செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் பேசிய பேச்சு
ஒரு நடிகராக நிஜமாகவே என் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது. மேடையில்
பேசக்கூடாத அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தி சக நடிகர்களை ‘நாய்’
என்று அவர்கள் பேசிய விதம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
சங்கத்தின் விதி எண் 13-ன் படி எந்தவொரு உறுப்பினரும் சக உறுப்பினரை பற்றி
அவதூறாகவோ, மனம் புண்படும்படியும் பேசினால் அந்த உறுப்பினரை தண்டிக்க சங்கத்திற்கு அனுமதியுண்டு.
நடிகர் குமரிமுத்துவை கூட இதே சட்ட விதியின்படிதான் இந்தச் சங்கம் நீக்கியது.
இதேபோலத்தான் ராதாரவியும், காளையும் பேசியிருக்கிறார்கள். இவர்கள் மீதும்
சங்கம் இதே போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கம் அதைச் செய்யுமா?
சங்கத்தின் சட்டப்படி சங்கத்தில் அனைவருக்கும் ஒரே நீதிதான் என்றால், நடிகர்
சங்கத்தின் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும், அதை சரத்குமார் செய்வாரா..? என்று சரத்குமார் மீது
பாய்ந்திருக்கிறார் விஷால்.
சும்மாவே எந்த முன்னணி ஹீரோவும் நடிகர் சங்கம் பக்கமே வர்றதில்ல, இதுல
இந்த பஞ்சாயத்து வேறையா..?