அரசியலுக்கு வர பயமில்லை, கொஞ்சம் தயக்கம் இருக்கிறது”
இப்படி ஒரு வரி தான் ‘லிங்கா’ ஆடியோ பங்ஷனில் பேசினார் ரஜினிகாந்த்.
அடுத்த நாளிலிருந்து ஆளாளுக்கு ”வழக்கம் போல இவர் சொல்லுவாரு…. ஆனா வர மாட்டாரு…” என்கிற ரீதியில் அவர்மீது தேவையில்லாத விமர்சனங்களை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதிலும் தமிழக அரசியல்வாதிகள் எங்கே வந்தால் ஜெயித்து விடுவாரோ என்கிற பயத்தில் இந்த நிமிடம் வரை ரஜினி அரசியலுக்கு வரவே வேண்டாம் என்கிற ரீதியிலேயே கருத்துகளை சொல்லி வருகிறார்கள்.
அவருடைய அரசியல் மூவ்மெண்ட் பற்றித்தான் பல ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதித் தள்ளுகின்றன.
இதற்கிடையே கோவா திரைப்பட விழாவில் இந்திய சினிமாவில் சிறந்த மனிதர் விருதை வாங்க இன்று அங்கு சென்றிருக்கும் ரஜினியிடம் பாலிடிக்ஸ் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி அதை தவறான செய்தியாக பரப்பி வருகிறது வட இந்திய சேனலான என்.டி.டிவி.
கோவா விமான நிலையத்தில் மனைவி லதாவுடன் இறங்கிய ரஜினியிடம் அரசியல் திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஜினி, அரசியலைப் பற்றி நான் இப்போது எதுவும் பேசவில்லை. நோ பாலிடிக்ஸ் என்றார். அதாவது இந்த நேரத்தில் அரசியல் பேச எனக்கு எண்ணம் இல்லை என்பது தான் அதன் அர்த்தம்.
அந்த அர்த்ததையே அப்படியே மாற்றி ”எனக்கு அரசியலே வேண்டாம்” என்று ரஜினி கூறியதாக அந்த சேனல் செய்தியை பரப்பி விட்டிருக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுன்னு தமிழ்நாடு மட்டுமில்ல, மொந்த இந்தியாவுமே பயப்படுது போலிருக்கு…
0 comments:
Post a Comment