நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்ட நடிகை மரியம் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் குத்தாட்ட நடிகையாக இருந்த நடிகை மரியம் கடந்த 2012ஆம் ஆண்டு நடன இயக்குனர் அரவிந்த தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் குத்தாட்டம் ஆடிய இவர், தற்போது கர்ப்பமாகியுள்ளதால் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஜோதிகா நடித்துக்கொண்டிருக்கும் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் திடீரென கர்ப்பமானதால் அந்த படத்தில் இருந்து தற்போது விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நடிகை மரியம் தெலுங்கு திரையுலகில் நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர். தமிழில் சுந்தர் சியுடன் நகரம் என்ற படத்திலும், அஞ்சான் படத்திலும் மட்டும் குத்தாட்டம் ஆடிய இவர் தெலுங்கில் 100% லவ், பேயிங் கெஸ்ட்ஸ், ஏஜண்ட் விநோத், போன்ற படங்களிலும் இந்தியில் ரவுடி ரத்தோர், டி-டே, கிராண்ட் மஸ்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
குழந்தை பெற்ற பின்னர் அந்த குழந்தையை பொறுப்புடன் கவனிக்க வேண்டியதுள்ளதால் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக மரியம் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment